தமிழகம்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Summary:

rain in tamilnadu


தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டுவந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாகவும் உள்மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும். அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மாலைப்பொழுதிலும், சில இடங்களில் இரவிலும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement