தமிழகம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Summary:

rain in tamilnadu

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கேரள, கர்நாடக கடலில் மணிக்கு 45இல் இருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் காவிரியில் நீர் வரத்து வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் விவசாயிகள் சோகத்தில் இருந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தகவலால் மகிழ்ச்சியில் உள்ளனர் டெல்டா விவசாயிகள்.


Advertisement