ஒரே ஒரு மகன்! கார் இருந்தும் எப்பவும் பைக் தான்! 12 நாட்கள் போராட்டம்! சடலத்துடன் பைக்கையும் புதைத்த பெற்றோர்! மனதை கலங்க வைக்கும் சம்பவம்...



gujarat-boy-buried-with-beloved-bike

குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் பர்மர் (18), எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரிக்குச் செல்லும் வழியில் நடந்த சோகம்

கடந்த மே 26 ஆம் தேதி, கிரிஷ் ஆனந்த் நகரத்திற்கு கல்லூரி சேர்க்கைக்காக சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பும் வழியில் அவரது பைக் ஒரு டிராக்டர் டிராலியில் மோதியது. இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால், 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பைக்கை நேசித்த கிரிஷ்

சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த கிரிஷ், BCA படிக்கத் திட்டமிட்டிருந்தார். பைக்கை மிகுந்த அளவில் நேசித்த அவர், கார் இருந்தும் எப்போதும் பைக்கில்தான் பயணம் செய்வார் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: 6 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை! 18 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு! அதிர்ச்சி சம்பவம்...

பைக்குடன் புதைக்கப்பட்ட இளைஞர்

கிரிஷின் விருப்பத்தை மரணத்திலும் மதிக்க வேண்டுமென எண்ணிய குடும்பத்தினர், அவரது இஷ்டமான பைக்கை கூட இறுதிச்சடங்கில் அவரோடு சேர்த்து புதைத்தனர். அவரது உடையுடன் கண்ணாடி, காலணி, ஆடைகள் மற்றும் பைக்கும் கல்லறையில் வைக்கப்பட்ட சம்பவம், அருகிலுள்ளவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

சமூக வலைதளங்களில் வைரலான காணொளி

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இளம் பருவத்திலேயே உயிரிழந்த கிரிஷின் இழப்பு மட்டுமல்லாது, பைக்குடன் உடன் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு, பலரது மனதையும் உருக வைத்துள்ளது.

 

 

இதையும் படிங்க: ரயிலில் கதவு அருகே நின்று கொடூரமாக சண்டை போட்டு தாக்கிய பெண்கள்! நெஞ்சை பதைப்பதைக்கும் வீடியோ…