தமிழகம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் இன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய கலிங்கப்பட்டிணம் என்ற இடத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சிகாரணமாகவும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. 

இந்தநிலையில், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement