
Rain in chennai
மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்கவே தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவஸ்தை பட்டுவந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் இரண்டு வாரங்களாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்து அறிவித்துள்ளது. அதில், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்தநிலையில் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement