சென்னையில் நள்ளிரவில் இருந்து கொட்டி தீர்க்கும் கனமழை! மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

சென்னையில் நள்ளிரவில் இருந்து கொட்டி தீர்க்கும் கனமழை! மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!


rain in chennai.


தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டுவந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது.

Rain in chennai

சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை விடாது மழை பெய்து வருகிறது. இந்தமழை பிற்பகல் வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக சென்னையில் போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம்  உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.