அதிகாலையில் இருந்து சென்னையில் வெளுத்துவாங்கும் கனமழை.! வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்.!

அதிகாலையில் இருந்து சென்னையில் வெளுத்துவாங்கும் கனமழை.! வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்.!



rain in chennai

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இரு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை ஆவடி, கோயம்பேடு, புரசைவாக்கம், எக்மோர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ப்ராட்வே, அடையாறு, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது.