தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்.!
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்.!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. சென்னையிலும் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி தமிழகத்தில் பின்வரும் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.