தமிழகம்

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Summary:

Rain alert for tamilnadu in next 24 hours

புதிதாக வெளியான வானிலை ஆய்வு மைய்ய அறிக்கையின்படி அந்தமான் அருகே புதிய காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:


தெற்கு அந்தமான் பகுதி, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது என்றும், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அருகே நீடித்து வந்த இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஆனது  தற்போது குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவிவருவதாகவும், அதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேடமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.


Advertisement