தமிழகம்

கஜா எதிரொலி: டிச. 10 வரை ரயில்களில் சரக்கு கட்டணம் ரத்து - ரயில்வே அமைச்சகம்

Summary:

Railway allows gaja relief things carried free

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது. புயல் பாதித்த ஒரு வாரத்திற்கு பிறகு கடந்த சில நாட்களாக தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்து வருகிறது. 

நிவாரண உதவிக்காக பலர் தமிழக அரசின் மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் நிதி அளித்து வருகின்றனர். 

மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் சரக்கு லாரிகள் மற்றும் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான போக்குவரத்து செலவுகளும் அதிகரிக்கின்றன. 

இந்நிலையில் இந்த நிவாரண பொருட்களை ரயில்களில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டி தமிழக முதலமமைச்சர் ரெயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சகம் “டிச. 10 வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து" என அறிவித்துள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


Advertisement