திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி.? சூடு பிடிக்கும் அரசியல் களம்.!
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி.? சூடு பிடிக்கும் அரசியல் களம்.!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. உடன் கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுத்ததால் தான் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து, இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளதா.? திமுகவிடம் எவ்வளவு தொகுதிகள் வரை கேட்கலாம் என்பது குறித்தும் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ராகுல்காந்தி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக் கரசர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.