புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த வீரத்தமிழன்.! சிங்கப்பூரில் திருடனை மடக்கி பிடித்து இளைஞரின் துணிகரம்.! பாராட்டிய சிங்கப்பூர் போலீஸ்.!

புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த வீரத்தமிழன்.! சிங்கப்பூரில் திருடனை மடக்கி பிடித்து இளைஞரின் துணிகரம்.! பாராட்டிய சிங்கப்பூர் போலீஸ்.!



pudukkottai young man caught theif

சிங்கப்பூரில் கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். 90 சதவிகித சிங்கப்பூர் நிறுவனங்கள், தமிழக ஊழியர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்க்கு காரணம் எந்த வேலை கொடுத்தாலும், தமிழர்கள் தயங்காமல் அதைச் செய்வார்கள் என்பதே.

அதிலும், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். குடும்பத்தை பார்க்காமல் வருட கணக்கில் சிங்கப்பூரில் இருந்தாலும், அந்த மன அழுத்தத்தைக் கூட கட்டுப்படுத்தி, அதனால் வேலையில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் புதுக்கோட்டை இளைஞர்கள்.

இந்தநிலையில், கடந்தமாதம் சிங்கப்பூர் நகைகடையில் நகையை திருடிவிட்டு மர்மநபர் நபர் ஒருவர் தப்பிக்க முயன்றுள்ளான். கடைக்காரர்கள் திருடனை தடுக்கமுடியாமல் தவித்துள்ளனர். அப்போது அங்கிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்துவிடுதி கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் மணிகண்டன் என்ற வாலிபர் துணிகரமாக திருடனை மடக்கிபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்தநிலையில், மணிகண்டனின் துணிகர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவரை கெளரவித்து பதக்கத்தை வழங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளார் மணிகண்டன்.