தமிழகம்

ஒட்டுமொத்த மக்களையும் வியக்கவைத்த புதுக்கோட்டை 2 வயது சிறுவனின் பாடல்! வைரல் வீடியோ!

Summary:

pudukkottai young boy song video

தற்போது பல சிறுவர்கள் பல துறைகளில் அசத்தி வருகின்றனர். சிறு வயதிலேயே பேச்சுப்போட்டி, நடனம், பாடல், ஓவியம், விளையாட்டு என பல போட்டிகளில் குழந்தைகள் நம்மை வியக்கவைக்கின்றனர். தொலைக்காட்சிகளில் நடனம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் பல குழந்தைகள் அசத்தி உள்ளதை பலரும் பார்த்திருப்போம்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் துவார் பகுதியை சேர்ந்த இளம் சிறுவன் மிகவும் அழகாக, அருமையாக ஒரு கிராமத்து பாடலை பாடியுள்ளார். அந்த 2 வயது சிறுவன் பாடியதை வீடியோவாக பதிவு செய்து அப்பகுதி இளைஞர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த இளம் சிறுவனை துவாரின் காந்தகுரல் அழகன், வரும்கால இசைஞானி , இசைப்புயல் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சிறு வயதிலேயே கொஞ்சம் கூட பிசிர் தட்டாமல் பாடி அசத்தியுள்ளார் 2 வயது சிறுவன்.


Advertisement