புதுக்கோட்டை அதிமுகவின் முக்கிய புள்ளி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.!

புதுக்கோட்டை அதிமுகவின் முக்கிய புள்ளி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.!


pudukkottai admk panchayat leader join dmk

சமீப காலமாக பல கட்சியில் இருந்தும் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் சில தங்களைத் திமுகவில் இணைத்துக்கொண்டனர். அதேபோல் அதிமுகவின் முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க.வைச்‌ சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித்‌ தலைவர்‌ டி. ஜெயலட்சுமி தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில்‌ தி.மு.க.வில்‌ இணைந்தார்‌. சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள கழக அலுவலகத்தில்‌, நேற்று மாலை அ.தி.மு.க.வைச்‌ சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர்‌  டி.ஜெயலட்சுமி தி.மு.க.வில்‌ இணைந்தார்‌.

Admk

அதுபோது புதுக்கோட்டை தெற்கு மாவட்டப்‌ பொறுப்பாளர்‌ எஸ்‌.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டப்‌ பொறுப்பாளர்‌ வழக்கறிஞர்‌ கே.கே.செல்லபாண்டியன்‌, சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ சிவ.வீ.மெய்யநாதன்‌, புதுக்கோட்டை தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர்‌ வை.முத்துராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்‌.