குடி போதையில் நடந்த விபரீதம்: நண்பனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கொடூரம்.!

குடி போதையில் நடந்த விபரீதம்: நண்பனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கொடூரம்.!


pudukkottai - alangudi - friend - murder

புதுக்கோட்டையில் குடிபோதையில் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள நெம்ம கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(22 ). இவரும் ஆலங்குடியில் வசித்து வரும் அப்துல் ரகுமான்(25 ) பள்ளி காலத்திலிருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த அன்று ஆலங்குடி, நெம்ம கோட்டை பகுதிகளுக்கு இடையே கட்டுமானம் நடைபெறும் பில்டிங்கில் இரவு மது அருந்தியுள்ளனர். ஆரம்பம் முதலே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறியதும் என்னவென்று அறியாது அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து பலமாக தாக்கியுள்ளார் அப்துல் ரகுமான்.

இதனை சற்றும் எதிர்பாராத சிவசுப்பிரமணியன் தலையில் பலத்த அடிபட்டு கீழே சரிந்து உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்த வீடுகளில் இருந்து வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அப்துல் ரகுமான் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.