புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலாளர்கள் போராட்டம்.! அவர்கள் வைக்கும் கோரிக்கை.!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலாளர்கள் போராட்டம்.! அவர்கள் வைக்கும் கோரிக்கை.!


pudukkotai-hospital-labour-protest

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் தற்போழுது அரசு மருத்துவமனை உதவிப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவிப்பணி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளாக தனியார் நிர்வாக மேனஜர் தங்களை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்குவதை நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், கிளவுஸ், சானிடைசர், PPE kit முதலியவற்றை பணிக்கு வரும்போது  தரவேண்டும். அரசு முன்களபணியாளரான தங்களுக்கு அறிவித்த ஊக்கத்தொகையை புதுக்கோட்டை தனியார் நிர்வாக மேனேஜர் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுப்பதை தடுத்து அனைவருக்கும் வழங்கவேண்டும்.

தனியார் கிரிஸ்டல் நிர்வாகம் மார்ச் மாதம் வழங்குவதாக உறுதியளித்த சம்பள உயர்வை வழங்க வேண்டும். தங்களை போராட்டகளத்தில் தள்ளிய கிரிஸ்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக சொற்ப சம்பளத்தில் வாரவிடுமுறை கூட இல்லாமல் பணிசெய்து போராடும் தங்கள் மீது பழிவாங்கும் போக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.