தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
ஊரடங்கு சமயத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு! பொங்கி எழுந்த பொதுமக்கள்!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் வருமானமின்றி திண்டாடி வருகின்றனர். கொரோனா காரணமாக ஆரம்பகட்டத்தில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் சென்னையை தவிர அணைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி வடக்கு அக்ரகாரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு காரணமாக எங்கள் கிராமத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை திறந்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடி- குளவாய்ப்பட்டி சாலையில் மண்எண்ணெய் கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் டாஸ்மாக் கடை அங்கு திறக்கப்படாது என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.