தமிழகம்

10, +12 பொதுத் தேர்வு! வெளியான புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

Summary:

public exam announcement

தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்காக மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும், இப்போது வரையில், பொதுத்தேர்வுக்கான  அட்டவணை வெளியாகியும் ப்ளூ பிரிண்ட் வெளியாகாததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

இந்நிலையில், தேர்வுக்குத் மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியர்களையும், தேர்வில் எந்த வகை கேள்விகள் கேட்கப்படும் என்று குழப்பமடையச் செய்துள்ளது. இந்தநிலையில் பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ப்ளு பிரிண்ட் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

ப்ளூபிரிண்ட் தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவாகும். எனவே,மாதிரி வினாத்தாளில் உள்ளபடி வினாக்கள் கேட்கப்படவில்லை என மாணவர்களும், ஆசிரியர்களும் உரிமை கோர முடியாது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


Advertisement