சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல தவிக்கும் 5 ஆயிரம் பேர்! கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்!

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல தவிக்கும் 5 ஆயிரம் பேர்! கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்!



Public crowd in commissioner office

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

corona

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. தங்களது குடும்ப உறுப்பினர்கள் இறப்பு, திருமணம் மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக, சென்னை நகருக்குள்ளோ அல்லது வெளிமாவட்டங்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்ல விரும்புபவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 7530001100 என்ற எண்ணுக்கு, குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ, உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால், உரிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று இதுபோன்ற அனுமதி சீட்டுக்களை பெறுவதற்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரிய அளவில் கூட்டமாக பொதுமக்கள் திரண்டனர். அங்கு ஏற்பட்ட கூட்டத்தை சமாளிக்க கமிஷனர் அலுவலக வாசல் மூடப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இது தொடர்பாக விண்ணப்பமனு கொடுத்துள்ளனர்.