வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி!வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி!வெளிவரும் அதிர்ச்சி தகவல்!


pregnant girl suicide

கடலூர் மாவட்டம் அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ 23
வயது நிரம்பிய இவர் புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.

பின்னர் இவர்களது காதல் வீட்டிற்கு தெரிந்து, பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணமும் நடந்து முடிந்தது. இந்தநிலையில், ஜெயஸ்ரீ கர்ப்பமாக இருந்துள்ளார். கர்ப்பமான 5 வது மாதத்தில் ஜெயஸ்ரீக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

வளைகாப்பு நிகழ்ச்சியின்போது அருண்ராஜ் வீட்டினர் ஜெயஸ்ரீக்கு தங்க வளையல்கள் போட சொல்லி பெண் வீடு தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருண்ராஜ் குடும்பத்துக்கும் ஜெயஸ்ரீ குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயஸ்ரீயின் சகோதரர் அருண்ராஜை தாக்கியுள்ளார். 

suicide

இதனையடுத்து இரு வீட்டினரும் சமாதானம் அடைந்த நிலையில், ஜெயஸ்ரீயை அழைத்துக்கொண்டு அருண்ராஜ் குடும்பம் புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு சென்ற சில நாட்களில் ஜெயஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு தகவல் வந்தது . இதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனே அருண்ராஜ் வீட்டுக்கு சென்றனர்.

அருண்ராஜ் வீட்டு அறையில் ஜெயஸ்ரீ சடலமாக தொங்குவதை கண்டு ஜெயஸ்ரீ குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர். இதனையடுத்து போலீசார் ஜெயஸ்ரீ சடலத்தை கைப்பற்றினார்கள். ஜெயஸ்ரீயின் சாவு குறித்து அவரது தாய் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.