தமிழகம்

"2 வயசு தான் இருக்கும்; என்ன ஒரு தைரியம்" பிரமிப்பூட்டும் சிறுவனின் வீடியோ!

Summary:

practising jallikatu with boys

தமிழக இளைஞர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து நடத்திய மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இந்த நாடு நிச்சயம் மறக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் பொங்கல் வருவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த மாபெரும் வெற்றி கிராமத்தில் பலரின் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாக மாடு வளர்ப்பில் ஈடுபடாமல் இருந்த பலரும் மீண்டும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க துவங்கியுள்ளனர். மேலும் அதற்கான பயிற்சிகளை அளிப்பதிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய படம்

சிறிய கன்று குட்டிகளாக இருக்கும் பொழுதே அதற்கான பயிற்சிகள் தீவிரமாக அளிக்கப்படும். குட்டிகளாக இருக்கும் பொழுது பெரியவர்கள் யாரும் அதனை சீண்டுவதில்லை. அதற்கு ஏற்றார் போல் சிறுவர்களை அவர்களுக்கு பயிற்சி அளிப்பர். மேலும் இது அந்த சிறுவர்களுக்கும் மாடு பிடிப்பது பற்றிய பயிற்சியை கொடுக்கும்.

அவ்வாறு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு சிறுவன் அந்த கன்று குட்டியை அடக்கும் விதம் மிகவும் சுவாரசியமாக உள்ளது. இந்த பிஞ்சு வயதில் இவ்வளவு தைரியம் அவனுக்கு எங்கிருந்து வந்தது என்று பிரமிக்க வைக்கிறது. இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் இது இயல்பாகவே இருக்கும் என்பது போல் தோன்றுகிறது. இதனை பலரும் பயன்படுத்தாமல் தவறவிட்டுவிட்டோம் என்பது இப்போதுதான் புரிகிறது.


Advertisement