BREAKING: பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.300 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்த குட் நியூஷ்!!!
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தரமான வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இவற்றின் தரத்தில் எந்த சமரசமும் இருக்காது என உறுதியளித்தார். இதனால், பொங்கல் பரிசுத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அன்புப் பரிசு போல் தரமான வேட்டி, சேலை
மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் சிறந்த தரத்தில் தயாரிக்கப்படும் என அமைச்சர் கூறினார். ஒரு சகோதரிக்கு அன்புடன் பரிசாக வாங்கிக் கொடுக்கும்போது எவ்வளவு தரத்தை எதிர்பார்ப்போமோ, அதே அளவுக்கு தரமான துணிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முட்டை விலை புதிய உச்சம்..! நாமக்கல்லில் கொள்முதல் விலை மீண்டும் உயர்வு..!
பொங்கல் பரிசுக்காக ரூ.300 கோடி
முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு பணிகளுக்கான முதற்கட்ட நிதியாக ரூ.300 கோடியை தமிழக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து, பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் மற்றும் அதன் விநியோகம் தொடர்பான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரொக்கப் பரிசு
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள வேட்டி-சேலைகள் தரமாக இருக்கும் என அமைச்சர் அளித்துள்ள உறுதி, பொங்கல் பரிசு குறித்த கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் அரங்கேறிய கொடுமை.. பகீர் சம்பவம்.!