ஷாக் நியூஷ்! இந்த கார்டுகளுக்கு இனி ரேஷன் பொருட்கள் இல்லை... 5.6 லட்சம் கார்டுகளுக்கு அரசு வைத்த அதிரடி ஆப்பு..!!!
கேரளாவில் நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பெறப்படாத குடும்ப அட்டைகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் பெறாத 5,62,494 குடும்ப அட்டைகள் தற்போது கண்காணிப்பில் உள்ளன. இவற்றுக்கான ரேஷன் விநியோகம் வரும் அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
5.62 லட்சம் குடும்ப அட்டைகள் கண்காணிப்பில்
அரசின் கணக்கெடுப்பின்படி, நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 4,40,811 வெள்ளை நிற அட்டைகளும், 1,21,683 நீல நிற அட்டைகளும் அடங்குகின்றன. போலியான அல்லது பயன்பாட்டில் இல்லாத அட்டைகளை அடையாளம் கண்டு, தகுதியான பயனாளிகளுக்கு ரேஷன் சேவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டை நிரந்தரமாக ரத்து செய்யப்படாது
அக்டோபர் 1 முதல் ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவது, குடும்ப அட்டை நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது என்று பொருள் அல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான பயனாளிகள் மீண்டும் ரேஷன் சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உரிய கால அவகாசமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
e-KYC முடித்தால் மீண்டும் ரேஷன் பெறலாம்
ரேஷன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் e-KYC நடைமுறையை முழுமையாக முடிக்க வேண்டும். மேலும், அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களின் மொபைல் எண்கள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் புதிய மொபைல் எண்ணை புதுப்பித்த பிறகு, விதிமுறைகளை பூர்த்தி செய்யும் அட்டைகளுக்கு ரேஷன் விநியோகம் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.