இத்தனை நாள் இது தெரியாம போச்சே... பாடகி ஜானகி குரலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்!!!
முட்டை விலை புதிய உச்சம்..! நாமக்கல்லில் கொள்முதல் விலை மீண்டும் உயர்வு..!
நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டை ₹6.65 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், முட்டையின் கொள்முதல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், கோழி தீவனங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனால் செலவுகளை சமாளிக்க முட்டையின் கொள்முதல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

தற்போது சென்னையில் ஒரு முட்டை சில்லரை விற்பனை விலை சுமார் ₹.7.30 ஆக உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு முட்டை ₹.7.50 முதல் ₹.8 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!
கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அடுத்த சில நாட்களில் சில்லரை சந்தையிலும் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முட்டை தினசரி உணவில் முக்கிய இடம் வகிக்கும் நிலையில், இந்த விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிகளவில் முட்டை பயன்படுத்தும் குடும்பங்களின் மாதாந்திர செலவும் இதனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 உயர்வு! கவலையில் பொங்கும் பொதுமக்கள்....