தமிழகம்

கைமீறிப்போன கடன் தொல்லை..! சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

Summary:

Police SI commit suicide in chennai

காவலர் ஒருவர் கடன் தொல்லையால்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் காவல் சேகர் (45). ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிப்புரிந்து வரும் இவர் விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சேகர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திடீர் துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவலரின் தற்கொலை குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

சொந்த ஊரில் புதிதாக வீடு ஒன்றை கட்ட சுமார் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சேகர் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததும், நிலைமையை சமாளிக்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது.


Advertisement