வடமாநிலத்தவர்களை விரட்ட வேண்டும்..! சர்ச்சைக்குரிய போஸ்டர் ஓடியவரை கைது செய்த போலீசார்.!



Police arrested who past viral posters in chennai veperi area

வடமாநிலத்தவர்களின் நிறுவனங்களை மூடவேண்டும் எனவும், வடமாநிலத்தவர்களை இங்கிருந்து விரட்டவேண்டும் எனவும் சர்ச்சைக்குரிய போஸ்ட்டரை அடித்து ஒட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

சென்னையில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றான வேப்பேரியில், கடந்த 11 ஆம் தேதி அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் சில வீடுகளை பூட்டிவிட்டு, வீட்டின் கதவிலும், சுற்றுசுவரிலும் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஓன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த போஸ்டரில், தமிழ் தேசியக் கட்சி சார்பில் தமிழர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் வெளிமாநிலத்தவர்களின் நிறுவனங்களைப் பூட்டுவோம் எனவும், வடமாநிலத்தவர்களை இங்கிருந்து விரட்டுவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தது. இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் வேப்பேரி காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சர்ச்சைக்குரிய போஸ்ட்டரை ஒட்டிவிட்டு, தப்பித்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சி நிர்வாகி சங்கர் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.