எதிர் வீட்டு பெண்ணின் முன்னால் நிர்வாணமாக நின்ற வாலிபர்... கைது செய்த போலீசார்..!

எதிர் வீட்டு பெண்ணின் முன்னால் நிர்வாணமாக நின்ற வாலிபர்... கைது செய்த போலீசார்..!


Police arrested the teenager who stood naked in front of the woman of the opposite house..

பக்கத்து வீட்டு பெண்ணின் முன்னால் நிர்வாணமாக நின்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையத்தில் வசித்து வருபவர் சுவிசன் (33). இவர்  ஜேசிபி ஆபரேட்டராக இருந்து வருகிறார்.  இவருக்கும், இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 38 வயது பெண்ணுக்கும்  இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் அந்த பெண் அவரது வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் இருந்த சுவிசன் அந்தப் பெண் பார்க்கும் படியாக அவர் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பக்கத்து வீட்டு வாலிபர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார் என்று காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுவிசனை கைது செய்துள்ளனர்.