தமிழகம் லைப் ஸ்டைல்

300 வீடியோ.! டிக்டாக் மூலம் கள்ளக்காதல்..! இளம் பெண்ணை யூஸ் செய்து சம்பாதித்த கால்டாக்சி டிரைவர்.! ஈரோடு பரபரப்பு.!

Summary:

Police arrested man who cheated a girl in tik tok

டிக் டாக்கில் டூயட் போட்டு இளம் பெண்ணை ஏமாற்றி நகை, பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (எ) ஹைருண்ணிசா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனது கணவரை பிரிந்து ஷர்மிளா தனியாக தனது குழந்தைகளுடன் வசித்துவருகிறார். மேலும், ஆன்லைன் வியாபாரமும் செய்துவருகிறார் ஷர்மிளா.

குழந்தைகள், வியாபாரம் என ஒருபக்கம் பிசியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் டிக் டாக் வீடியோ போட்டு வந்துள்ளார் ஷர்மிளா. மேலும் ஆண்களின் வீடியோவுக்கு ஷர்மிளா டூயட் போட்டுவந்துள்ளார். இந்த வகையில்தான் ஈரோடு மாவட்டம் மரபாலம் பகுதியை சேர்ந்த உமர் ஷெரிப் என்ற நபருடன் ஷர்மிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கார் ஓட்டுநரான உமர் சுமார் 300 வீடியோக்களும் மேல் பல்வேறு பெண்களுடன் டிக் டாக்கில் தம்பிக்கண்ணு என்ற பெயரில் டூயட் போட்டுள்ளார். இதனிடையே ஷர்மிளாவுக்கும், உமருக்கும் நெருக்கம் அதிகமானதை அடுத்து இருவரும் தங்கள் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு தொலைபேசியில் பேசிவந்துள்ளனர்.

உமருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகள் இருப்பதை மறைத்து, தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக ஷர்மிளாவிடம் கூறியுள்ளார். ஷர்மிளாவுக்கும் கணவன் இல்லை என்பதால் இவர்கள் உறவு அடுத்த கட்டத்திற்கு சென்று திருமண பேச்சுவார்த்தை வரை சென்றுள்ளது.

மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துவந்துள்ளனர். இதனிடையே ஷர்மிளாவிடம் இருந்து உமர் 10 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். சரி வருங்கால கணவர்தானே என ஷர்மிளாவும் கொடுத்துள்ளார். இப்படியே நாட்கள் செல்ல செல்ல, உமர் ஷர்மிளவை திருமணம் செய்துகொள்வதாக இல்லை.

ஒருகட்டத்தில் தான் கொடுத்த பணம் மற்றும் நகையை ஷர்மிளா திருப்பி தருமாறு உமரிடம் கேட்க, பணம், நகைகளை திருப்பி கேட்டால் உல்லாசத்தின் போது எடுத்த வீடியோ, புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என உமர் ஷர்மிளாவை மிரட்டியுள்ளார்.

உமரின் சுயரூபம் புரிந்துகொண்ட ஷர்மிளா ஒருமுறை அவரது தொலைபேசியை பார்த்தபோது பல்வேறு போலிக்கணக்குகளை உருவாக்கி உமர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது ஷர்மிளாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால், தன்னைப்போல் வேறு யாரும் இவனிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்த ஷர்மிளா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஷர்மிளாவின் புகாரை அடுத்து போலீசார் உமரை விசாரித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement