குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல்துறை அதிகாரி! பரிசோதனையில் கொரோனா உறுதி! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா Covid-19

குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல்துறை அதிகாரி! பரிசோதனையில் கொரோனா உறுதி!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் காவல் நிலையத்தைச் சேர்ந்த 57 வயதான உதவி ஆய்வாளர் நேற்று இரவு அவரது இல்லத்திலுள்ள குளியலறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

ஆனால், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக வைட்ஃபீல்ட் காவல்துறை துணை ஆணையர் கூறியுள்ளார். 

55 வயதுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் வீட்டிலே இருக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இறந்து போன காவல் அதிகாரி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் இப்போது மறைந்த காவல்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி கண்டறிந்து வருகின்றனர். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo