தமிழகம்

ரவுடிகளை வேட்டையாடும் தமிழக போலீசார்.! க்ளீன் ஆகும் தமிழகம்.! 2 நாட்களில் எத்தனை ரவுடிகள் கைது தெரியுமா.?

Summary:

ரவுடிகளை வேட்டையாடும் தமிழக போலீசார்.! க்ளீன் ஆகும் தமிழகம்.! 2 நாட்களில் எத்தனை ரவுடிகள் கைது தெரியுமா.?

தமிழகம் முழுவதும் சமீப காலமாக கொலை குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனகாரணமாக தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் மேகொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சற்று அதிகரித்த நிலையில், குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு 
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணிநேரம் ரவுடிகளை பிடிக்கும் வேட்டையில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஏற்கனவே குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்கள், வழக்குகளில் தேடப்பட்டுவந்தவர்கள் என மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் போலீசார் ரவுடிகளை பிடிக்கும் வேட்டையில் களமிறங்கினர். இதையடுத்து நேற்று மாலை 4 மணி முதல் ரவுடிகள் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஏற்கனவே 450 ரவுடிகள் கைதான நிலையில் திருவாரூரில் மேலும் 10, புதுகோட்டையில் மேலும் 5 ரவுடிகள் சிக்கினர்.  

தமிழகம் முழுவதும் 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கைதான ரவுடிகளிடமிருந்து 350 அரிவாள்கள், 5 துப்பாக்கிகள், கஞ்சா பொட்டலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Advertisement