தமிழகம்

இதுக்கு ஒரு முடிவே இல்லையா.? வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை.!

Summary:

3 நாட்களுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து ரூ.93.11க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீப காலமாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மறுபடியும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.86க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement