இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.? மீண்டும் அதிகரித்த பெட்ரோல்,டீசல் விலை.! வேதனையில் வாகன ஓட்டிகள்.!

இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.? மீண்டும் அதிகரித்த பெட்ரோல்,டீசல் விலை.! வேதனையில் வாகன ஓட்டிகள்.!



petrol diesel price increased

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது.

அந்தவகையில்,  நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த வருடத்தில் பெட்ரோல் விலை உச்சகட்டமாக உயர்ந்து பொதுமக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. பெட்ரோல் விலை உயர்ந்தநிலைக்கு சென்று குறையாமல் சமீப தினங்களாக ஒரே விலையில் விற்கப்பட்டது.

petrol

நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.38-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.86.96-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.93.62-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ.87.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.