அய்யோ..!! இதுக்கு முடிவே இல்லையா..? பெட்ரோல்-டீசல் விலைய பார்த்தீங்களா..?

அய்யோ..!! இதுக்கு முடிவே இல்லையா..? பெட்ரோல்-டீசல் விலைய பார்த்தீங்களா..?



petrol

இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் , டீசல் விலை மாற்றம் என்ற முறையில் மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 10 காசுகள், 12 காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே வந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

Petrol cost

இந்நிலையில், இன்று (அக்டோபர் 14)  பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்ந்திருக்கிறது. நேற்றைய விலை மதிப்பின்படி, பெட்ரோல்  லிட்டர் ரூ 101.79 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 97.59 ஆகவும் விற்பனையாகி வந்துள்ளது. இதனையடுத்து, இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து, ரூ 102.10 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து, ரூ 97.93 ஆகவும் உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.