தமிழகம்

கோவையில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசிய மர்ம நபர்கள்! போலீசார் தீவிர விசாரணை!

Summary:

Periyar statue issue in kovai

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலை மீது காவிச் சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர். இதனை இன்று காலையில் பார்த்த  அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். 

 

இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் பதற்றம் உருவானது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


இதனையடுத்து தண்ணீர் ஊற்றி பெரியார் சிலை சுத்தம் செய்யப்பட்டது. அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் பெரியார் சிலை முன்பு காவல் துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.


Advertisement