
people get ration things in all ration shop
நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனையடுத்து மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
அத்துடன் மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் முறைக்கான உள்மாநில பெயர்வுத் திறன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement