அரசியல் தமிழகம்

புதுக்கோட்டை மத்திய மாவட்டம் ஆலங்குடி அ.ம.மு.க-வில் திடீர் குழப்பம்..!ஆரம்பமானது சதுரங்கவேட்டை!

Summary:

புதுக்கோட்டை மத்திய மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அமமுக-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் நீண்ட வருடங்களாக அதிமுக மற்றும் திமுக இடையே தான் முதல்வர் வேட்பாளருக்கான போட்டி அதிகமாக இருக்கும். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா தரப்பினர் டிடிவி தினகரன் தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டனர். 

இந்தநிலையில் வரும் தேர்தலுக்கு முன்பே சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் வரும் தேர்தலில் அமமுக முக்கிய அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தான் அதிகப்படியான இளைஞர்கள் அமமுகவில் உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் மாநாடு நடத்தியபோது ஒட்டுமொத்த தமிழகமே புதுக்கோட்டையை திரும்பி பார்த்தது. அந்த அளவிற்கு கூட்டம். அப்பகுதியில் எந்த ஒரு விழா நடந்தாலும் அமமுக போஸ்டர்கள் தான் எங்கு பார்த்தாலும் இருக்கும். இந்தநிலையில் புதுக்கோட்டை மத்திய மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அமமுக-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே அமமுக-வில் யாரும் அப்பகுதியில் பொறுப்புகளை எதிர்பார்ப்பதில்லை என பேசப்படுவது வழக்கம்.  இந்தநிலையில் கடந்த நான்கு வருடங்களாக களப்பணியியில் இருந்தவர்களை நீக்கிவிட்டு புது முகங்களை நியமித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துவருகின்றது. இது குறித்து அப்பகுதி அமமுக-வினர் கூறுகையில் இந்த புதிய நியமனம் ஆளுங்கட்சியின் சதிவேலை என்றும் கூறுகின்றனர். 


Advertisement