மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!
மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

கோவை மாவட்டம், கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு ஷ்யாம் என்ற 15 வயது மகன் இருந்துள்ளார். இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ஷ்யாம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அழுது புலம்பியுள்ளனர் சத்யராஜ்- சரண்யா தம்பதியினர்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர், மேலும் உறவினர்களிடம் மகன் இறந்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக் கூறிவந்துள்ளனர். இதற்கிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சத்யராஜ்- சரண்யா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர். இதனையடுத்து அவர்களது உடலை மீட்ட போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.