தமிழகம்

4 வயது குழந்தை கண்முன்னே துடிதுடிக்க நேர்ந்த கொடூரம்! இரத்த வெள்ளத்தில் மிதந்த பெற்றோர்கள்! பகீர் சம்பவம்!

Summary:

Parents killed by uncle for property

கரூர் மாவட்டம் மணவாடி அருகே அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார்.இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு 4 வயது மகள் உள்ளார். மேலும் இவர்களுடன் மனநிலை பாதிக்கப்பட்ட தாயும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் தீடீரென ரங்கநாதன் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவியையும் குழந்தையின் கண்முன்னே அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் அந்த குழந்தை செய்வதறியாது தந்தையின் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து உறவினர் ஒருவருக்கு போன் செய்துள்ளது.

அதனை தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து இது குறித்து  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் அங்கு விரைந்த போலீசார்கள், மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அந்த மர்மநபர்கள், ரங்கநாதனின் சித்தி மகன்கள் லோகநாதன், பிரவீன், கவுதமன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது  குடும்பத்தில் சொத்து தகராறு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது எனவும்,  அதனாலேயே அவர்கள் கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement