தமிழகம்

காதலனுக்காக சினேகா செய்த செயல்!. பெற்றோரின் தற்கொலை முடிவு! அதிர்ச்சி சம்பவம்!.

Summary:

காதலனுக்காக சினேகா செய்த செயல்!. பெற்றோரின் தற்கொலை முடிவு! அதிர்ச்சி சம்பவம்!.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த அகத்தூர்சாமி இவரின் மனைவி சொர்ணலதா. இந்த தம்பதியினருக்கு  சினேகா என்ற 23 வயது நிரம்பிய மகள் சிவகாசியில் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தார். அந்த கல்லூரியில் இளைஞர் ஒருவரை காதலித்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சினேகாவை கண்டித்து, கோவையில் உள்ள கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், சினேகா தனது காதலரை திருமணம் செய்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சினேகா தனது காதலருடன் சென்றுவிட்டார். தனது மகள் தங்களை விட்டு சென்று விட்டதால் மனமுடைந்த பெற்றோர் இருவரும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அகத்தூர்சாமி நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், நேற்றைய தினம் சொர்ணலதாவும் மரணமடைந்தார்.

சினேகாவுக்காக தான் பெற்றோர்கள் உயிரை விட்டுள்ளனர். ஆனால் தான் பெற்றோர் இறந்த சம்பவம் கூட சினேகாவுக்கு இதுவரை தெரியவில்லை என கூறுகின்றனர்.


Advertisement