வீட்டு வாசலில் பயங்கரம்... அடகு கடை அதிபர் குத்தி கொலை.!! மர்ம நபர் வெறி செயல்.!!



pan-broker-brutally-murdered-police-investigates-AYQB78

தஞ்சாவூர் மாவட்டத்தில் அடகு கடை நடத்தி வந்த அதிமுக பிரமுகர் வீட்டுத் திண்ணையில் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாகயிருக்கும் மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.கே.ஆர் கனகராஜ். 72 வயதான இவர் பைனான்ஸ் தொழில் மற்றும் வீட்டில் அடகு கடை நடத்தி வந்தார். மேலும் மாத்தூர் பகுதியில் இவருக்கு சொந்தமான பெட்ரோல் பல்க் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கிறார் கனகராஜ்.

tamilnadu

அப்போது அங்கு வந்த மர்ம நபர் கனகராஜை கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில் கனகராஜின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!

மேலும் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. கனகராஜ் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா.? அல்லது முன்பகை காரணமாக கொல்லப்பட்டாரா.? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி கொலை செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!