துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமெரிக்கா செல்கிறார்! என்ன காரணம் தெரியுமா?

கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமெரிக்கா செல்லவுள்ளார். வரும் 7 ஆம் தேதி வியாழக்கிழமை ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்லவுள்ளார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் செல்கிறார்.
அமெரிக்க நாட்டின் சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணகள் மேற்கொள்வது தமிழகத்தினை மென்மேலும் உயர்த்தும் என கூறுகின்றனர் அதிமுகவினர்.