ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..

ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..


ops-wife-vijayalakshmi-passed-away

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த தகவல் கட்சி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் விஜயலட்சுமியின் உயிர் பிரிந்தது.

உயிரிழந்த விஜயலட்சுமி அவர்களின் வயது 63 . அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.