எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.! ஒருபோதும் கனவு பலிக்காது.! மகிழ்ச்சியுடன் பேசிய ஓபிஎஸ்.!

எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.! ஒருபோதும் கனவு பலிக்காது.! மகிழ்ச்சியுடன் பேசிய ஓபிஎஸ்.!


ops talk about opponent party

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சமீப காலமாக அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்கின்ற போட்டி நிலவி வந்தது. இந்தநிலையில் தற்போது அதற்கான தீர்வு கிடைத்துள்ளது. 

அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ops

இதனையடுத்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், "மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.