தாறுமாறாக ஏறிய வெங்காயத்தின் விலை! இன்று ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் லைப் ஸ்டைல்

தாறுமாறாக ஏறிய வெங்காயத்தின் விலை! இன்று ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா?

தொடர் மழை மற்றும் சரியான விளைச்சல் இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறியது. சில நாட்களுக்கு முன் வரை ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிலேயே வெங்காயம் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறுகையில்: மகாராஷ்டிரத்தில் மீண்டும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததே இந்த திடீர் விலையேற்றத்திற்கு காரணம் என கூறியுள்ளார். இந்த நிலை சில நாட்களில் சரியாகி, மீண்டும் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo