நாங்கள் தேங்காய் பறிக்கலாமா! முதல்வருக்கு ட்விட் செய்த நபர்..! முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா? வைரலாகும் ட்வீட் பதிவு.

நாங்கள் தேங்காய் பறிக்கலாமா! முதல்வருக்கு ட்விட் செய்த நபர்..! முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா? வைரலாகும் ட்வீட் பதிவு.



One person asked questions to CM

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் தங்களது தேங்காய் மரத்தில் தேங்காய் பறித்து வெளியூருக்கு விற்பனை செய்யலாமா என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

CM

இந்நிலையில் தற்போது மக்கள் யார் வேண்டுமானலும் தன்னை தொடர்பு கொண்டு கேள்விகளை கேட்கலாம் என்பது போல மக்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உடனே தனது பதிலை கூறி வருகிறார். அதேபோல் தான் அந்த நபர் கேட்ட கேள்விக்கு ஒன்றை மணி நேரத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாராளமாக செய்யுங்கள் தம்பி என்று பதிலளித்துள்ளார்.