கட்டுக்கட்டாக இருந்த பணம்! பிரித்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!old-indian-500-and-1000-rupees-notes-taken-from-kovai

கோவை வடவள்ளி லட்சுமி நகரில் உள்ள பங்களா ஒன்றை ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். இவர்கள் இருவர் நடவடிக்கையின் மீதும் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்றபோது வீட்டில் தங்கியிருந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதனை அடுத்து போலீசார் பங்களாவில் சோதனையிட்டதில் அங்குள்ள அறைகளில், செல்லாத பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 268 கட்டுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

Crime

மேலும், கட்டு கட்டாக இருந்த பணத்தை பிரித்து பார்த்தபோது மேலேயும், அடியிலும் மட்டும் ரூபாய் நோட்டுகளும், பணத்துக்கு இடையே வெள்ளைத்தாளும் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடியவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? செல்லாத பணத்தை வைத்திருக்க என்ன காரணம்? அதிலும் இடையில் வெள்ளை தாள் இருக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.