16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்! சிறுமியை மீட்ட அதிகாரிகள்!

16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்! சிறுமியை மீட்ட அதிகாரிகள்!


officers stopped child marriage

கொரோனாவால் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வேலையில் வேலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடப்பதும் அதிகரித்துள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில்  வேலூர் மாவட்டத்தில் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுவரை ஊரடங்கு காலத்தில் மட்டும் 73 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Child marriage

ஊரடங்கு சமயத்தில் இதுபோன்ற விஷயங்கள் வெளியில் தெரியாது என்பதால் இது போன்ற குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆரணியை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் நடைபெற இருந்த குழந்தை திருமணம் ரகசிய தகவலின் படி சமூக நலத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சிறுமிக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அங்கு சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்ததை அடுத்து, அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.