கொரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்!

கொரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்!


No traffic in chennai

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதுபல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை கடும் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் ஆரம்பத்தில் இருந்து, தமிழகத்தின் அணைத்து விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு செய்பட்டு தீவிர கண்காணிப்பில் தமிழக சுகாதாரத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், பார்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

traffic

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் விடுமுறை அறிவித்து வருகின்றன. சென்னையில் அதிகப்படியான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பல நிறுவனங்களில் ஊழியர்கள் நேரடியாக வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவித்துள்ளது. வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.

இதனால் சென்னை மாநகரமே இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. விடுமுறை நாட்களை விட இன்று அணைத்து சாலைகளும் காலியாகவே உள்ளது. சென்னை ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி,கல்லூரிகள்,  திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் 31ஆம் தேதி வரை மூடப்பட்டதால் சென்னை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.