இனி பள்ளிகளில் இதை பயன்படுத்த அதிரடி தடை! பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

இனி பள்ளிகளில் இதை பயன்படுத்த அதிரடி தடை! பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!


No for plastics in schools after January one

பள்ளி கல்வித்துறையில் நாளுக்கு நாள் புது புது மாற்றங்களை கொண்டு வருகிறார் கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள். அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி, LKG , UKG வகுப்புகள் என புது புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்திவருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

இதற்கு முன்னர் பையோ மெட்ரிக் முறையில் வருகை பதிவேடு என புது புது தொழிநுட்பங்களையும் பள்ளி கல்வித்துறைக்கு கொடுத்த பெருமை திரு செங்கோட்டையன் அவர்களையே சேரும். அதுமட்டும் இல்லாமல் வரும் பொங்கல் முதல் பள்ளி மாணவர்களுக்காக புது டிவி சேனல் தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

Senkotaiyan

மேலும் பள்ளிகளுக்கு புது புது விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார் செங்கோட்டையன். இதற்கு முன்னர் பள்ளி மாணவிகள் கொலுசு அணிய கூடாது என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் ஜன.1-ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.