பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் ரத்து! அமைச்சரின் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி!

பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் ரத்து! அமைச்சரின் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி!



no exam fees for 5th and 8th


இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தொடக்கக்கல்வித்துறை தீவிரப்படுத்தியது. இதனையடுத்து 5 மற்றும் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தாங்கள் பயிலக்கூடிய பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் நேற்று அறிவித்திருந்தது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

exam
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எதிர்காலத்தில் பெண்களுக்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பேசிய அமைச்சர் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.